Thursday 5 October 2017

தமிழ்நாடு மணல் இணைய சேவை பற்றிய கேள்வி பதில்

தமிழ்நாடு மணல் இணைய சேவை பற்றிய கேள்வி பதில்ககள்:

பொதுவான கேள்விகள்:

உங்கள் பொதுவான அய்யங்களுக்கு எளிய விளக்கம்
தமிழ்நாடு மணல் இணைய சேவை என்றால் என்ன?
• தமிழ்நாடு மணல் இணைய சேவை என்பது தமிழக பொதுப்பணித்துறையின் மணல் முன்பதிவிற்கான இணையம் மற்றும் செல்லிடப்பேசி செயலி சேவையாகும்.
இந்தச் செயலியை / சேவையை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
• தமிழ்நாட்டில் எவரும் இந்தச் சேவையைப் பயன்படுத்தி மணல் குவாரிகளின் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
லாரி உரிமையாளர் : 

லாரி உரிமையாளர் அல்லது ஓட்டுனர் எவ்வாறு முன்பதிவு செய்வது?
• லாரி உரிமையாளர் தன்னைப் பதிவு செய்துகொண்ட பின் தன்னுடைய பதிவுக்கணக்கில் எளிமையாக தன்னிடமுள்ள லாரிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். பதிவுசெய்யப்பட்ட லாரியின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளைத் தேர்வு செய்து பயன்பெறலாம்.
லாரி உரிமையாளரான நான் எத்தனை லாரிகளை இதில் சேர்க்கலாம்?
• லாரிகளைச் சேர்க்க அளவு வரம்புகள் கிடையாது. ஒருமுறை லாரி உரிமையாளராக நீங்கள் பதிவு செய்து கொண்ட பின், நீங்கள் எத்தனை லாரிகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
பொது மக்கள் எப்படி மணல் பதிவு செய்வது?
• பொதுமக்கள் தமிழ்நாடு மணல் இணைய சேவைசெயலியில் தங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்துகொண்டு, நடப்பிலுள்ள குவாரி வரிசையில் தங்களுக்கு விருப்பமான வரிசையைத் தேர்வு செய்து மணலை பெற்றுக்கொள்ளலாம்.
எனது கடவுச்சொல்லை மீட்டமைப்பது எப்படி?
• நீங்கள் எங்கள் சேவை மைய எண்ணைத் தொடர்புகொண்டு உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம்.
எனது முன்பதிவை ரத்து செய்வது எப்படி?
• நீங்கள் முன்பதிவை ரத்து செய்ய இயலாது.
ஒரு லாரிக்கு எத்தனை முன்பதிவுகளை நான் செய்ய முடியும்?
• ஒரு லாரிக்கு ஒரு சமயத்தில் ஒரே ஒரு முறை மட்டும் நீங்கள் முன்பதிவு செய்யமுடியும். முன்பதிவு செய்யப்பட்ட லாரியில் மணல் பெறப்பட்ட பிறகே, மற்றொரு முன்பதிவிற்குத் தகுதி அடையும்.

No comments:

Post a Comment